சிந்தனை கவிஞர் கவிதாசனுக்கு தமிழக அரசின் சார்பில் ‘சொல்லின் செல்வர் விருது’

சிந்தனை கவிஞர் கவிதாசனுக்கு ‘சொல்லின் செல்வர் விருது’ தமிழக அரசின் சார்பில் வழங்கப்படவுள்ளது.

தமிழ் வளர்ச்சி – விருதுகள் -2019 ஆம் ஆண்டிற்கான தமிழ்ப் புத்தாண்டு விருதுகளான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு.போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, சிங்காரவேலர் விருது, மறைமலையடிகளர் விருது, அம்மா இலக்கிய விருது, அயோத்திதாசப் பண்டிதர் விருது, சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, உலக தமிழ் சங்க விருதுகள் மற்றும் முதலமைச்சர் கணினி தமிழ் 2018 ஆகிய விருதுகள் வழங்குதல் – விருதாளர்களை தேர்வு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இதில் கோவையை சேர்ந்த சிந்தனை கவிஞர் கவிதாசனுக்கு ,சொல்லின் செல்வர் தமிழக அரசின் சார்பில் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது. இது குறித்து இவர் பேசுகையில், தமிழக அரசு ‘சொல்லின் செல்வர்’ என்ற விருதினை அறிவித்துள்ளது. இதற்காக முதலமைச்சருக்கும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருக்கும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள், செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 30 வருடமாக மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை கருத்துகளையும், வெற்றியின் திசையை அடையலாம் காட்டியிருக்கிறேன். எழுத்து மூலமாக 75 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை நூல்களும், மனிதவள மேம்பட்டு குறித்த நூல்களும் எழுதியிருக்கிறேன். இதுமட்டுமல்லாமல் மேடைதோறும் அன்னை தமிழை எடுத்துரைக்கும் பங்கினை நான் சிறப்பாக செய்துவருவதாக கருதி அரசாங்கம் இந்த விருதினை எனக்கு அறிவித்துள்ளது. இது என்னை மேலும் ஊக்குவித்து, இன்னும் சிறப்பாக மக்களுக்கு பல கருத்துக்களை கொண்டு சேர்ப்பதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இது என்னக்கு மிகவும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், என்னை சார்ந்தவர்களுக்கு பெருமையை சேர்க்கும் விருதாக நான் இதனை கருதுகிறேன்.

உலகின் மிக மூத்த மொழியான தமிழ் மொழி. அத்தகைய பெருமைக்குரிய தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை இந்த விருதுகளை கொடுப்பதன் மூலமாக தமிழ் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தமிழறிஞர்களை கௌரவிக்கும் விதமாக செய்கின்ற முயற்சி பாராட்டதக்கது. இதன் மூலம் உலகமெங்கும் தமிழ் பரவ வேண்டும் என்ற பாரதியின் கனவு நனவாகும் என்றார்.