உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 10ஆம் ஆண்டு விழா

உலக தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 10 ஆம் ஆண்டு விழா டாக்டர் என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி அரங்கேறியது.

கல்லூரியின் செயலரும், உலக தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் அறங்காவலருமான தவமணி தேவி பழனிசாமி வரவேற்புரை வழங்கினார்.

மேலும் சிற்பி பால சுப்பிரமணியம் விருது பெறுபவர்களை அறிமுகம் செய்தார்.

இந்நிகழ்வில் மருதநாயகம் – சிற்பியின் பாரதி கைதி எண் 253 என்ற ஆங்கில மொழியாக்கக் கவிதை நூலை உலக தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் நல்ல பழனிசாமி வெளியிட முனைவர் மருதநாயகம் பெற்றுக்கொண்டர்.

இதனை தொடர்ந்து, உலக தமிழ்ப் பண்பாட்டு மையம் 2023 ஆம் ஆண்டுக்கான உ.வே.சா.  தமிழறிஞர் விருதினை பா.ரா. சுப்பிரமணியன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், ரூ. 3 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இதையடுத்து, பெரியசாமித்தூரன் தமிழ்ப் படைப்பாளர் விருதை எழுத்தாளர் நாஞ்சில் நாடன், டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழத் தொண்டர் விருதினை முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி அகியோர் பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு பாராட்டுப் சான்றிதழ்களும் ரூ. 2 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. மேலும், முனைவர் சு. சண்முகசுந்தரம்,  முனைவர் ஆ. மணி, எழுத்தாளர் க. அம்சப்ரியா ஆகியோருக்கு சிறப்பு விருதுகளாக பாராட்டுப் சான்றிதழ்களும் , ரூ. 50,000 க்கான காசோலை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் விருது பெற்றோருக்கு வாழ்த்துரை வழங்கினார்.

டாக்டர் என் ஜி பி கலை அறிவியல் கல்லூரி இயக்குநர் முத்துசாமி நன்றியுரை வழங்கினார்.