ஆதரவு குரல் கொடுத்த வீரர்; ஐசிசி கண்டனம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா பயிற்சியின் போது, அணிந்திருந்த ஷூவில் இடம் பெற்ற வாசகம் சர்ச்சைக்குள்ளாகி பேசும் பொருளாகியுள்ளது.

கடந்த 2010-11 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணையில் உஸ்மான் கவாஜா அறிமுகமானார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இடம்பெற்றது இதுவே முதல்முறை ஆகும்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி சார்பில் உஸ்மான் கவாஜா விளையாடுகிறார். ஆகையால், மைதானத்தில் பயிரச்சியில் ஈடுபட்டிருந்த உஸ்மான் கவாஜா ‘அனைத்து உயிர்களும் சமம்’ என்ற வாசகம் பொருந்திய ஷூவை அணிந்திருந்தார். இதனையடுத்து, நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாதிக்கப்பட்டிருக்கும் காசா மக்களுக்காகத் தனது ஆதரவை அவர் தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டது.

ஐசிசி விதிமுறைப்படி எந்தவொரு அரசியல் சார்ந்த பதிவையும் வீரர்கள் அணிந்திருக்கக்கூடாது. அதன்படி, உஸ்மான் கவாஜாவின் இந்த செயலுக்கு ஐசிசி தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உஸ்மான் கவாஜாவின் இந்த செயலுக்கு ஆதரவாக உள்ளது.