அதிக கோல்களை அடித்த கிலியன் எம்பாப்பே

23 வயதில்   பீலே, மாரடோனா, மெஸ்ஸி என கால்பந்து நாயகர்களின் சாதனைகளை முறியடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார் கிலியன் எம்பாப்பே.

கத்தாரில் போலாந்து அணியுனான கால்பந்து உலகக் கோப்பை நாக் அவுட் செய்து போட்டியில் இரண்டு கோல்களை அடித்து பிரான்சின் வெற்றிக்கு உதவினார். அவர் ஆடிக் கொண்டிருப்பது அவரது இரண்டாவது உலகக் கோப்பை போட்டி. இதில் மாத்திரம் இதுவரை 5 கோல்களை அடித்திருக்கிறார்.

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஒரு பதின்ம வயது இளைஞராக கோல் அடித்த பீலேவின் பெருமையை 2018-ஆம் ஆண்டில் அவர் பகிர்ந்து கொண்டார்.

உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை அவர் அடித்திருக்கும் கோல்களின் எண்ணிக்கை 9.

லியோனல் மெஸ்ஸி 5 உலகக் கோப்பை போட்டிகளில் அடித்த கோல்களின் எண்ணிக்கைக்கு இது சமம்.

உலகக் கோப்பை போட்டிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த கோல்களைவிட ஒன்று அதிகம்.  மாரடோனா, நெய்மர், தியரி ஹென்றி, பிரேசிலின் ரொனால்டோ போன்ற பெரிய நட்சத்திர வீரர்களைவிடவும் எம்பாப்பே அதிக கோல்களை அடித்துவிட்டார்.

கத்தாரில் இதே வேகத்தில் ஆவர் ஆடினால் ஒரே உலகக் கோப்பை போட்டியில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெறக்கூடும்.