எஸ்.என்.எஸ்., கல்லூரி சார்பில் ‘கூகுளத்தான் 2.0’  போட்டி

எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லூரியின், ‘கூகுள் ஸ்டுடன்ட் டெவலப்பர் கிளப்’ சார்பில் ‘கூகுளத்தான் 2.0’ என்ற மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டி அண்மையில் நடந்தது.

இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராகக் கூகுள் தீர்வு ஆலோசகர் ரமேஷ் கிருஷ்ணன் உதயகுமார் பங்கேற்று, மாணவர்களின் திறனை ஆராய்ந்து மதிப்பீடு செய்தார்.

இந்த ஹேக்கத்தான் நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு, எஸ்.என்.எஸ்., கல்லுாரி சார்பில் ‘ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவை ஆராய்வதற்கான தளம், உணவு, தங்குமிடம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, 16 கல்லூரிகளைச் சேர்ந்த 180 மாணவர்கள் பங்கேற்றனர்.