“ஜிடிபி அதிகரிப்பதற்குத் தனிநபர் வருமானம் உயர வேண்டும்”

சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரி நூலகத்தில் ஷேப்பிங் ஆப் நாலேட்ஜ்(அறிவை வடிவமைத்தல்) என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் தொழில் நுட்ப கல்லூரி நூலகர் எஸ்.ஏ.பசூலுர் ரகுமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்;  இந்தியா உலக அரங்கில் நன்கு முன்னேறியுள்ளது நாட்டின் நிலையான வளர்ச்சிக்குப் பொருளாதாரம் மிக முக்கியம். ஜிடிபியில் முன்னேற வேண்டுமானால் தனிநபர் வருமானம் உயர வேண்டும் அது இன்றைய இளைஞர்களாகிய மாணவர்கள் கையில் உள்ளது, மாணவர்கள் நன்கு படித்து தங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் அதற்கான வளம் இக்கல்லூரி நூலகத்தில் உள்ளது அதனை நன்கு பயன்படுத்தி முன்னேறுமாறு கூறினார்.

முன்னதாக கல்லூரி இயக்குநர் பாலுசாமி  தலைமையுரை ஆற்றினார். அவர்  பேசுகையில், மாணவர்கள் மேன்மையடைய புத்தக வடிவிலும் டிஜிடல் வடிவிலும் உள்ள நூலகத்தைப் பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

இதில் 250- ற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் கல்லூரி நூலகர் கவிதா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.