இந்துஸ்தான் கலை கல்லூரியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா “இதழாளர் – கலைஞர்” கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீடு இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி கலையரங்கில் இன்று நடைபெற்றது.

கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா மலரான “இதழாளர் – கலைஞர்” வெளியிடப்பட்டது. நூலை கே.ஜி மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர்‌ பக்தவத்சலம் வெளியிட அதனை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலர் சரஸ்வதி கண்ணையன் பெற்றுக் கொண்டார்.

 

இவ்விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சருமான சாமிநாதன் மேலும் இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநரும், உறுப்பினர் செயலருமான மோகன், நக்கீரன் கோபால், விஜய் சங்கர், பர்வீன்சுல்தானா, கவிஞர்.கவிதாசன் புலவர்.செந்தலை கவுதமன், கோவி. லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.