இந்துஸ்தான் கல்லூரியில்  இளைஞர்களுடன் இளைஞர்கள் இணைப்பு பிரச்சாரம்!

இந்துஸ்தான் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இந்திய தரநிலைகள் பணியகம் [Bureau of Indian Standards-BIS] ஆகியோர் இணைந்து மாணவர்களுக்கான, “இளைஞர்களுடன் இளைஞர்கள் இணைப்பு பிரச்சார நிகழ்ச்சியை  (Youth to  Youth Connect Campaign) யமுனா அரங்கத்தில் நடத்தின.

இந்நிகழ்ச்சியைக் கல்லூரி முதல்வர் ஜெயா, டீன் இன்னோவேஷன் சிவா, இந்திய தரநிலைகள் பணியகம் குழு அமைப்பாளர்  கார்த்திக் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில் இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) குழுவில் இருக்கும் மாணவர்கள், கல்லூரியில் பயிலும் பொறியியல் மாணவர்களுக்கு “BIS CARE APP” பயன்களை பற்றி எடுத்துரைத்து, ரூபாய் 30,000 ஊக்குவிப்பு தொகையாக அளித்துள்ளனர்.

மேலும், கல்லூரியின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், இணை செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, கல்லூரி முதல்வர் ஜெயா மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், இயந்திர பொறியியல் துறை தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களை பாராட்டினர்.