பெண்களின் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்! – சமுதாய வளைகாப்பில் வானதி சீனிவாசன்

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 300 கர்ப்பிணி பெண்களுக்கு  சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோவை இராமநாதபுரம் எஸ்.என் அரங்கில் நடைபெற்ற விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பிறுமான வானதி சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தினர். மேலும், பாரம்பரிய முறைப்படி அவர்களுக்கு  சீர் வரிசைகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் பேசிய வானதி சீனிவாசன், “தாய்மை என்பது வரம். இறைவன் பெண்களுக்கு தாய்மையை தந்தருளி இருக்கிறார். ஆகையால், பெண் குழந்தைகள் சிறுவயது முதலே ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். அது, அவர்களின் கர்ப்பகாலத்தின் போது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு, கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவும். பெண்களுடைய ஆரோக்கியம் தான் நாட்டின் ஆரோக்கியம்” எனக் கூறினார். இதில், மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.