நாம் கண்டு ரசிக்கும் நிலவின் வயதுதான் என்ன?

அண்மைக்காலமாக நிலவின் மீதான ஆராய்ச்சியில் தீரா காதல் கொண்டுள்ள உலக நாடுகள், நிலவு சார்ந்த பல ஆய்வுகளை நடத்தி வருகிறது.

1959 ஆண்டு சோவியத் யூனியன் லூனா 1 விண்கலத்தை ஏவியது. நிலவின் அருகே சென்ற முதல் விண்கலம் என்ற பெருமையையும் 1966 ஆம் ஆண்டு லூனா 9 நிலவில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.

அதன் பிறகு அமெரிக்கா அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பியது. இதன் பிறகு, நிலவின் வயது, நிலவில் உள்ள வளங்கள் என்ற பல கேள்விகளுக்கு விடைகளைத் தெரிந்து கொள்ளப் பல நாடுகள் முனைப்புக் காட்டி வருகின்றன.

அதற்கேற்ப பல ஆச்சர்யமான தகவல்களை நிலவு வழங்கிக் கொண்டேதான்  இருக்கிறது. அந்த வகையில், 1972ஆம் ஆண்டு நாசாவின் அப்பல்லோ 17 திட்டத்தில்

நிலவிலிருந்து பூமிக்குக் கொண்டு வரப்பட்ட 110 கிலோ எடை கொண்ட பாறை மற்றும் மண் மாதிரிகளில் இப்போதும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

முன்னதாக, நிலவு பற்றின ஆய்வு முடிவில் அதன் வயது கணக்கிடப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின் படி நிலவின் வயது 446 கோடி ஆண்டுகள் என்ற துல்லிய தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது, சூரியக் குடும்பம் உருவாகிய 11 கோடி ஆண்டுகளில் நிலவும்  உருவாகி இருக்கலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நாம் கண்டு ரசிக்கும் நிலவின் வயது சுமார் 446 கோடி ஆண்டுகள் இருக்கக்கூடும் என்கிறது ஆய்வு முடிவுகள்.