பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி

பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 57-வது அகில இந்திய அளவிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் ஆகஸ்ட் 26 முதல் 30-ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நடைபெறுகிறது.

இந்த போட்டியில் ஏ பிரிவில் – இந்திய கப்பல் படை அணி லோனாவாலா, வருமான வரி துறை அணி சென்னை, பேங்க் ஆஃப் பரோடா அணி பெங்களூரு மற்றும் கேரளா போலீஸ் அணி ஆகிய அணிகளும், பி பிரிவில் இந்தியன் வங்கி அணி சென்னை, இந்திய இராணுவ அணி புது தில்லி, மற்றும் கேரளா மாநில மின்சார வாரிய அணி ஆகிய அணிகளும் கலந்து கொள்கின்றன.

ஞாயிற்றுகிழமை நடைபெற்ற இரண்டாம் நாளின் முதல் போட்டியில் வருமான வரித்துறை அணியை எதிர்த்து கேரளா போலீஸ் அணி விளையாடியது. இதில் வருமான வரித்துறை அணி 85 – 65 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் இந்தியன் வங்கி அணியை எதிர்த்து கேரள மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில் இந்தியன் வங்கி அணி 78 – 67 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

மூன்றாவது போட்டியில் இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து பாங்க் ஆப் பரோடா அணி விளையாடியது. இதில் இந்திய கப்பல் படை அணி 77 – 76 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. நான்காவது போட்டியில் இந்திய இராணுவ அணியை எதிர்த்து சுங்க துறை அணி விளையாடியது. இதில் இந்திய இராணுவ அணி 85 -75 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

இந்த தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியன் வங்கி, இந்தியன் கப்பல் படை, வருமான வரி மற்றும் இந்திய ராணுவ அணிகள் வெற்றிபெற்றுள்ளது.