புரோசோன் மாலில் இரவு 11 மணி வரை ஷாப்பிங் செய்யலாம்

ஆகஸ்ட் 12 முதல் 15ம் தேதி வரை புரோசோன் மாலில் 70% ஆடி தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி சுதந்திர தின விழாவையொட்டி மாலில் மூவர்ண அலங்காரம் செய்யப்பட்டு பல கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று இரவு 11 மணி வரை கூடுதலாக ஷாப்பிங் செய்யலாம் என புரோசோன் மால் அறிவித்துள்ளது.

இந்த 70% ஆடி தள்ளுபடியில் உள்நாட்டு, வெளிநாட்டு பிராண்ட் பொருட்கள் மீது தள்ளுபடி, சலுகைகள் வழங்கப்படுகின்றன. எச் அன்ட் எம், மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர், டிரென்ட்ஸ், ஸ்பார், பாண்டலுானஸ், மேக்ஸ், குரோமா மற்றும் பல பொருட்கள் மீது இந்த சலுகைகள் கிடைக்கின்றன. ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு அலங்கார பொருட்கள் ஒரே கூரையின் கீழ் கிடைக்கின்றன.