நா.கார்த்திக் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

பீளமேடு கோபால்நாயுடு மேல்நிலைப் பள்ளியில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா கார்த்திக் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

 

இந்நிகழ்வு 27 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் முன்னிலையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன், ஆசிரியர்கள், திமுக உறுப்பினர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.