ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பைரவா மோப்பநாய்

வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி,  உலாந்தி என நான்கு வன சரகங்கள் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ளன. இப்பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாடுவது, மரங்கள், சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவது போன்ற வன குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிவதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு மோப்பநாய் கொண்டுவரப்பட்டது.

வைகை அணைப்பகுதியில் ஆறு மாதங்களுக்கு மேல் காவல்துறையின் மூலம் பயிற்சி பெற்ற டாபர்மேன் நாய் மோப்பநாய் கொண்டுவரப்பட்டது. சந்தன கட்டை கடத்தல், வெடி மருந்து மற்றும் வனப்பகுதியில் இருக்கும் கஞ்சா செடி போன்றவற்றை கண்டறிய இந்த மோப்பநாய்க்கு நன்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மோப்பநாய்க்கு தற்போது 1 வயது ஆகிறது. இதற்க்கு பைரவா என பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்த மோப்பநாய்க்கு, வேட்டை தடுப்பு காவலர் கணபதி, பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள முதல் மோப்பநாய் இது தான் என்று ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.