ரத்ததான முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டு விழா

கோவையில்  தேசிய தன்னார்வ ரத்ததான நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிகளவிலான ரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்த , அமைப்பாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தேசிய தன்னார்வ இரத்ததான நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு மாநில எயிட்ஸ்  கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் சார்பில், இந்த தினம் கொண்டாடப்பட்டது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் அதிகளவிலான ரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்த , அமைப்பாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் கோவையில் அதிகளவிலான ரத்த தானம் செய்வதர்களை கெளரவித்தனர். இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் அசோகன் செய்தியாளர்களிடம் பேசிய போது, கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி மற்றும் மேட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசின் ரத்த வங்கிகள் செயல்பட்டு வருவதாகவும், இந்த ரத்த வங்கிகளின் அதிகளவில் ரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து தந்த அமைப்பாளர்களை பாராட்டும் விதமாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக கூறினார். குறிப்பாக இந்த வருடத்தில் மட்டும் 107 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ரத்தம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். அனைவரும் ரத்த தானம் செய்ய முன் வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

 

பேட்டி: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் அசோகன்