பே பல்கலைக் கழகத்தின் மருத்துவ துறையின் அமெரிக்கமுறை ஐந்தாண்டு எம்டி படிப்பை கோவையில் அறிமுகம் செய்து உள்ளனர்.

பே பல்கலைக் கழகத்தின் மருத்துவ துறையின் அமெரிக்கமுறை ஐந்தாண்டு எம்டி படிப்பை கோவையில் அறிமுகம் செய்து வைக்கும் துவக்கக் விழா நடைபெற்றது. துவக்கக் விழாவில் அரிமா சங்கத்தின் முன்னாள் கவர்னர் மனோகரன்,கேபிட்டல் மார்க்கெட் செயல் இயக்குனர் வெங்கடேசன், ஜி எஸ் எஸ் ஸ்பின்னர்ஸ் நிர்வாக இயக்குனர் பழனிச்சாமி, சில்பா முன்னாள் தலைவர் சின்னையன், கோவை மருத்துவ கல்லூரி அறுவை சிகிச்சை டாக்டர் கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பே பல்கலைக் கழகத்தின் மருத்துவ துறை தலைவர் மணிவண்ணன் அழகிரிசாமி, காணொளி காட்சி மூலம் விழாவில் பங்கேற்றார். இந்த படிப்பை அறிமுகப்படுத்துவதன் மூலமாக,  மருத்துவ கல்வி குறைந்த செலவில் பெற வாய்ப்பு கிடைத்து உள்ளதாக பே பல்கலைக் கழகத்தின் மருத்துவ துறையில் தொடர்பாளர் குணசேகரன் தெரிவித்தார். அமெரிக்காவில் கிடைக்கும் தரமான மருத்துவ கல்வியை பெற வேண்டும் என நோக்கத்தில் இந்த திட்டத்தை துவங்கி உள்ளதாக தெரிவித்தனர். மருத்துவ அறிவியலை நன்கு புரிந்து கொள்ளும் வகையில் அவசியங்களுடன் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் அடிப்படையில் வகுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. பே பல்கலைக் கழக மருத்துவ துறை கோவை , மதுரை, திருச்சி. செகந்திராபாத், விசாகை, எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இத்தகைய கருத்தரங்கை நடத்த முடிவு செய்து உள்ளனர்.