சர்வதேச வைர நகைகள் இனி கோவையில்.. டீ பியர்ஸ் ஃபார் எவர்மார்க் கோவை ஜோஸ் ஆலுக்காஸுடன் ஒப்பந்தம்..

கோவை: டீ பியர்ஸ் ஃபார் எவர் மார்க், உலகின் முன்னணி மற்றும் நம்பகமான வைர நகை பிராண்டாகும்.

இது தென்னிந்தியாவின் முன்னணி நகை வர்த்தக நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸுடன் இன்று இணைந்து அவர்களது கோயம்புத்தூர் விற்பனையகத்தில் தனது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துகிறது.

இந்நகழ்வில் நடிகை பவித்ரா லட்சுமி பங்கேற்று சிறப்பித்துள்ளார். இவ்விரு பிராண்டுகளும் தங்களது தனித்துவமான வடிவமைப்புத்தன்மை மற்றும் சிறந்த தரமிகு வைரங்களை வெளிப்படுத்தும்.

இவ்விரு நிறுவனங்களின் சேர்க்கை மிகவும் சரியான இணைப்பாக அமைவதால் உலகின் அழகிய அரிய வகை வைரங்களை மிகவும் பொறுப்புடன் சேகரித்து, இயற்கையான வைரங்களை மிகவும் அழகுற வடிவமைப்பது, பிரத்யேகமான மற்றும் அழகிய ஆபரணமாகத் தருகின்றன.

டீ பியர்ஸ் பார்எவர்மார்க் நகைகளை அணிந்து அழகுற காட்சியளித்தபடி திரைநட்சத்திரம் பவித்ரா லட்சுமி கூறியதாவது: “டீ பியர்ஸ் பார்எவர் மார்க் மற்றும் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனங்களுடன் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

ஃபார் எவர் மார்க் வைர நகைகள் உள்ளபடியே பிரத்யேகமான அடையாள எண்கள் கொண்டவை, இவை இயற்கையானவை, சிறந்த வைரங்கள் கைகளால் தேர்வு செய்யப்படுபவை. இயற்கை தன்மை கொண்டவை என்பதை நிரூபிப்பவை.

இதனாலேயே இவை அழகாகவும், அரியவகை தன்மை கொண்டதாகவும் விளங்குகின்றன. மேலும் மிகவும் பொறுப்புணர்வுடன் கூடுதல் கவனத்துடன் இத்தகைய ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதை இன்று உணர முடிகிறது.

கோவை உள்ள பெண்கள் நிச்சயம் இந்த ஆபரணங்கள் குறிப்பாக வைரம் பதித்த நகைகளை நிச்சயம் பாராட்டுவார்கள். அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் பல தரப்பட்ட ஆபரணங்கள் பல வடிவங்களில் வந்துள்ளது.

இவ்விரு நிறுவனங்களின் கூட்டணி குறித்து வர்கீஸ் ஆலுக்கா, நிர்வாக இயக்குநர் ஜோஸ் ஆலுக்காஸ் கூறியதாவது:

“சர்வதேச அளவில் பிரபலமான பிராண்டாகத் திகழும் டீ பியர்ஸ் பார்எவர்மார்க் நிறுவனத்துடனான கூட்டணி குறித்த அறிவிப்பை ஈடு இணையில்லாத மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம். டீ பியர்ஸ் நிறுவனத்துக்கும் எங்களுடைய நிறுவனத்துக்குமான கூட்டணியால் எங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிக எண்ணிக்கையில் நவீன டிசைன் மற்றும் பாரம்பரிய வடிவமைப்புகளிலான ஆபரணங்களை வழங்க வழி ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டணி மூலம் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமான அதேசமயம் ஈடு இணையற்ற தயாரிப்புகளை அளிக்க முடியும் என்பதை உறுதிபட கூற முடியும்,’’ என்றார்.

ஆபரணங்களின் கலெக்ஷன் குறித்து திரு. பால் ஜே ஆலுக்கா, நிர்வாக இயக்குநர், ஜோஸ் ஆலுக்காஸ் கூறியதாவது: “டீ பியர்ஸ் பார்எவர்மார்க் நிறுவனத்துடன் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான தருணாகும். அவர்களது அரிய பல கலெக்ஷன், அழகிய வடிவமைப்பு, இயற்கையான வைரம் ஆகியவற்றின் காரணமாக வைரத்திற்கு தென்னிந்தியாவில் உள்ள பெண்கள் மத்தியில் அதிக டிமாண்ட் உள்ளது.

அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே இத்தயாரிப்பு குறித்த புரிதல் அதிகம் உள்ளது. கோயம்புத்தூரில் தற்போது எங்கள் விற்பனையகத்தில் சர்வதேச வடிவமைப்பு கொண்ட டீ பியர்ஸ் பார்எவர்மார்க் நகைகள் அதாவது கிளாசிக் சாலிட்டேர் நகைகள் முதல் பாரம்பரிய நகைகள் வரை நவீன காலத்திற்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன,’’ என்றார்.

இவ்விரு நிறுவனங்களின் இணைப்பு குறித்து திரு ஜான் ஆலுக்கா, நிர்வாக இயக்குநர், ஜோஸ் ஆலுக்காஸ் கூறியதாவது:

“டீ பியர்ஸ் பார்எவர்மார்க் எப்போதும் நம்பகமான வைர நகைகளை அளிப்பதில் மிகுந்த பொறுப்புடன் செயல்படுகிறது. இதன் மூலம் எங்களது வாடிக்கையாளர்களுக்கு உலகின் மிக அழகிய வைர நகைகளை நிச்சயம் அவர்கள் வாங்கி பெருமையுடன் அணியலாம். இத்தகைய வாய்ப்பு எங்களது விற்பனையகத்தில் உள்ள டீ பியர்ஸ் பார்எவர்மார்க் வைர நகைகளை வாங்கி அணியும்போது கிடைக்கும். உண்மையிலேயே சர்வதேச அளவில் பிரபலமான பிராண்டாக 135 ஆண்டுகளுக்கு மேலாகத் திகழும் டீ பியர்ஸ் பார்எவர்மார்க் நிறுவனத்துடன் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது,’’ என்றார்.

இரு நிறுவனங்களின் ஒப்பந்தம் குறித்து திரு. அமித் பிரதிஹரி, துணைத் தலைவர், டீ பியர்ஸ் பார்எவர்மார்க் தெரிவித்ததாவது: வைர நகை பதித்த ஆபரணங்களை வாங்குவது என்று முடிவு செய்தவுடன் வாடிக்கையாளர் முதலில் தேர்வு செய்வது நம்பகத்தன்மை மற்றும் வைரத்தின் தரத்தை மட்டுமே. எங்கள் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மட்டுமல்ல, நகை வர்த்தகத்தில் முன்னோடிகளாக அதேசமயம் டீ பியர்ஸ் நிறுவனம் வகுத்துள்ள கடினமான விதிமுறைகளை பூர்த்தி செய்யும் நிறுவனங்களை மட்டும்தான் தேர்வு செய்யும்.

வணிகத்தில் உயரிய குறிக்கோள், நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இத்தகைய விதிமுறைகளைக் கொண்டு செயல்படும் நிறுவனங்களுடன்தான் கூட்டணி சேர்வோம்.

அவ்விதம் கோயம்புத்தூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளதன் மூலம் இப்பகுதியில் உள்ள மாக்களுக்கு நிறுவனத்தின் இணையில்லா ஆபரணங்கள் கிடைக்க வழியேற்பட்டுள்ளது. ஜோஸ் அலுக்காஸின் நவீன வடிவமைப்பில் உருவான ஆபணங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. அத்தகைய திறன் மிகு நிறுவனத்துடன்தான் இப்போது கூட்டு சேர்ந்துள்ளோம் என்றார்.

பிரத்யேகமான டீ பியர்ஸ் பார்எவர்மார்க் கலெக்ஷனை ஜோஸ் ஆலுக்காஸில் வாங்கலாம். பார்எவர்மார்க் பிரத்யேக ஆபரணங்களான அவாந்தி கலெக்ஷன் முதல் கிளாசிக் பார்எவர்மார்க் கலெக்ஷன் வரையான தயாரிப்புகள் மிகவும் பிரபலமான பார்எவர்மார்க்கின் பாரம்பரிய செட்டிங் கலெக்ஷன் ஆகியவையாகும். ஒவ்வொரு வடிவமைப்பும் மிகவும் நுணுக்கமானவை. டீ பியர்ஸ் பார்எவர்மார்க் வைரத்தின் தனித்தன்மையை பறைசாற்றுபவை. மோதிரம், தோடு, பென்டன்ட் மற்றும் வளையல்கள் கிடைக்கும்.