கே.எம்.சி.எச் செவிலியர் கல்லூரியில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச தின அனுசரிப்பு

கே.எம்.சி.எச் செவிலியர் கல்லூரியில், மனநல செவிலியர் துறையினர் ஜூன் 26ஆம் தேதி திங்கட்கிழமை  அன்று போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை அனுசரிக்கும் நிகழ்ச்சியை வரதராஜபுரம் தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டின் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுதினர்.

இந்நிகழ்ச்சியானது பிரார்த்தனை பாடலுடன் தொடங்கப்பட்டது. பேராசிரியர் டாக்டர் புவனேஸ்வரி, மனநல செவிலியர் துறைத் தலைவர் அனைவரையும் நிகழ்ச்சிக்கு வரவேற்றார். G.சதாசிவம் நினைவு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் N.G.ராமசுவாமி தலைமையுரை வழங்கினார். கேஎம்சிஎச் செவிலியர் கல்லூரி முதல்வர் ச.மாதவி உரை வழங்கினார். 3 ஆம் ஆண்டு செவிலியர் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த போதைப்பொருள் பயன்பாட்டின் தீய விளைவுகள் குறித்து மைம் மற்றும் நாடகம் இயற்றினர்.

மாணவிகள் பல்வேறு மருந்துகள் மற்றும் அவற்றின் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் கலந்து கொண்டனர், மேலும் மாணவர்கள் ஆர்வத்துடன் உரையாடி தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டனர்.