கோவையில் ஹெல்த் வாக் – ஆய்வுகளை மேற்கொண்ட அமைச்சர்

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்படவுள்ள ”ஹெல்த் வாக்” திட்டத்தின்கீழ் ஜூன் 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று கோவை, பந்தய சாலை மற்றும் வாலாங்குளம் பகுதியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையை தேர்வு செய்து, உறுதி படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டார்.

தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஸ், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, துணை மேயர் வெற்றிசெல்வன், பொதுசுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீரங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.