ஊட்டியில் தென்மேற்கு பருவ மலையை முன்னிட்டு பேரிடர் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.

கோவை மே 27-

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்குகிறது. எனவே கனமழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக போக்குவரத்து சாலையில் முறிந்து விழும் மரங்கள் மற்றும் மண்சரிவு ஆகியவற்றை உடனடியாக சரிசெய்யும் வகையில், நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேரிடர் மீட்பு உபகரணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட மேல்குந்தா, இத்தலார், பாலகொலா, முள்ளிகூர் ஊராட்சிகள், கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வருவாய்த்துறை சார்பில் பேரிடர் மீட்பு உபகரணங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

அதேபோல மஞ்சூர் சாலை கெத்தை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடப்பாரை, மண்வெட்டி, கயிறு, பார்ஷா எந்திரம், ஒலிபெருக்கி, ஜே.சி.பி வாகனம், மணல் மூடைகள் ஆகியவை தயாராக உள்ளன.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் நேற்று குந்தா வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டு உள்ள பேரிடர் மீட்பு உபகரணங்களை ஆய்வு செய்தார். அப்போது அவை இயங்கும் நிலையில் உள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மஞ்சூர் அரசு தொடக்க கல்வி அலுவலர் முகாமில் ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை மற்றும் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.49.30 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் கூடுதல்

கட்டிடங்களை பார்வயைிட்டார். அப்போது மேற்கண்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுரை கூறினார்.