கோவை மாநகராட்சியில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது

கோவை மே 23-

கோவை மாநகராட்சியில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேயர் கல்பனா ஆனந்தகுமார் துணை மேயர் ஆகியோர் மனுக்களை பெற்றென.

பல்வேறுபட்ட மனுக்கள மக்களால் வழங்கப்பட்டது வீட்டு மனை பிரச்சனை ரோடு செம்மைப்படுத்துதல்,குடிநீர் பிரச்சனை,இடப்பிரச்சனை என மனுக்கள் குவிந்தன.

முக்கியமாக அண்ணா மார்க்கெட்டை சேர்ந்த வியாபாரிகள் மனு அளித்தன அதில் அவர்கள் 420 கடை உரிமையாளர்கள் உள்ளோம் திடீரென 420 பேரையும் காலி செய்ய சொல்லி பக்கத்தில் உள்ள குப்பைமேடு பகுதியில் செல்லும் படி கூறுகின்றன எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது ஆதலால் அண்ணா மார்க்கெட் பகுதியிலேயே தொடர்ந்து நீடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை பேருந்து நிலையத்திற்கு உள்பகுதியில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது அந்த கடை உரிமையாளர்கள் ஒன்றாக சேர்ந்து வந்து மீண்டும் கடை அமர்த்திக் கொள்ள அனுமதி கோரி மணலித்தன இது போன்று பல்வேறு விதமான மனுக்கள் பொதுமக்களால் கொடுக்கப்பட்டது.