மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி, இராமசாமி வீதி, எம்.ஜி.ஆர். மார்க்கெட் பின்புறம் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் (Micro Compost Centre) தயாரிக்கும் மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, இராமசாமி கவுண்டர் வீதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை வகைப்படுத்தி தரம்பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

உடன் மாமன்ற உறுப்பினர் பேபிசுதா ரவி, உதவி ஆணையர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் கலாவதி, சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் ஹரிபிரசாத், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.