கே.ஜி. அறக்கட்டளையின் டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லினியம் விருது விழா

கோவையின் புகழ்பெற்ற கே.ஜி. அறக்கட்டளை சார்பில் தங்கள் வாழ்நாளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா 5.4.2023 அன்று புதன்கிழமை கே.ஜி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர் தமிழக ஆளுநர் R.N.ரவி அவர்கள் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.

Dr. ரேலா மருத்துவ மையத் தலைவர் பேராசிரியர் முகமது ரேலா, அப்போலோ மருத்துவமனை இருதயநோய் நிபுணர் டாக்டர் G.செங்கோட்டுவேலு, ஜெம் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் C.பழனிவேலு, தினமலர் பத்திரிகையின் கோயம்புத்தூர் பதிப்பு பதிப்பாளர் திரு. L.ஆதிமூலம், கே.ஜி.மருத்துவமனை இருதய அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் U.அருண்குமார், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி ரேடியாலஜிஸ்ட் நிபுணர் டாக்டர் A.L.பெரியகருப்பன், கே.ஜி.மருத்துவமனை தலைமை நரம்பியல் நிபுணர் டாக்டர் T.C.R.ராமகிருஷ்ணன், கே.ஜி.மருத்துவமனை மூளை மற்றும் முதுகெலும்பு அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் S.ராஜ்குமார் ஆகியோருக்கு டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லினியம் விருது வழங்கப்பட்டது.

கடந்த பத்தாண்டுகளில் மிகச்சிறந்த சாதனை படைத்த ஆளுமைகளுக்கான விருது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தலைவர் M.கிருஷ்ணன், ரத்னா குழுமத் தலைவர் PL.K.பழனியப்பன், லட்சுமி கேட்டரிங் தலைவர் மாதம்பட்டி நாகராஜ் ரங்கசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

கே.ஜி. அறக்கட்டளைத் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் G.பக்தவச்சலம் அவர்களின் பிறந்தநாள் விழா விருந்தினர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

கே.ஜி. மருத்துவமனை மற்றும் முதுநிலை மருத்துவக்கல்லூரி நிர்வாக அறங்காவலர் டாக்டர் அசோக் பக்தவச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.