இந்துஸ்தான் கலை கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை கல்லூரியில் பி.காம்(சிஏ) துறை சார்பில் “கிரிஸ்டல்-2023” என்ற சர்வதேச கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்கில் இந்திய அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்தும் கல்லூரிகளிலிருந்தும் 600க்கும் மேற்பட்டோர் தங்களது பெயர்களை பதவிட்டு தங்களது படைப்புகளான பேப்பர் பிரஷன்டேசன் செய்தனர். இதில் மிகச்சிறந்த பேப்பர் பிரசன்டேஷன் விருது வென்றவர்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் இந்தியா முழுவதிலுமிருந்து 300க்கும் மேற்பட்டோர் பிஸ்னஸ் க்ரோத் அண்ட் சஸ்டைனபிலிட்டி (Business Growth and Sustainable) புத்தகங்களையும் தங்களது படைப்புகளாக வழங்கினர்.

மேலும், இக்கருத்தரங்கில் கொச்சினில் உள்ள அமிர்தா விஷ்வ வித்யா பீடத்தின் வணிகவியல் மற்றும் மேலாண்மை துறை தலைவர் பாலசுப்ரமணியன், அமெரிக்காவின் டெக்காஸ் மாகாணத்தின் உள்ள Enterprise Development and Integration (Informationservices)ன் இயக்குனர் சதீஸ்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

எத்தியோப்பியா நாட்டில் உள்ள கெப்ளி நெஹார் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத்துறை மற்றும் College of Business and Economics துறையின் இணைப்பேராசிரியை கார்த்திகா, பெங்களுரில் உள்ள எம்.பி.ஏ. பொறியியல் கல்லூரியின் துறையின் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியருமான மனோகரன் பெங்களுரில் உள்ள Achariya Institute of Graduate Studes-ன் வணிகவியல் மற்றும் மேலாண்மை துறையின் தலைவர், ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற தறை தலைவர் கோபாலகிருஷ்ணன் Inspiring 7G’s in Business Growth & Sustainability என்ற தலைப்பிலும் பேசி, இக்கருத்தரங்கில் பேராசிரியைகள் மாணவ மாணவிகள் பங்கேற்று அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்று கூறினார்.

மேலும் இதில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் சரஸ்வதி, நிர்வாக செயலர் பிரியா, கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி, துறையின் தலைவர் லோகநாதன், அத்துறையின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.