கே.பி.ஆர் கல்லூரியில் தாய்மொழி தின சிறப்புப் பட்டிமன்றம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பைந்தமிழ் மன்றம் தாய்மொழி தின சிறப்புப் பட்டிமன்றம் நடத்தியது. ”மொழியும் பண்பாடும் வளர்கிறது..! தளர்கிறது..! எனும் தலைப்பில் அமைந்த பட்டிமன்ற நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் கீதா தலைமை தாங்கினார்.

தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முத்துக்குமாரவடிவேல் பட்டிமன்றத்தின் நடுவராக இருந்தார். வளர்கிறது எனும் தலைப்பில் பரணி ஸ்ரீ, தனு ஸ்ரீ, தன்யா ஆகியோரும், தளர்கிறது எனும் தலைப்பில் மைதிலி தேவி, வைஷ்ணவி, அனுகீர்த்தனா ஆகியோரும் பேசினர்.

தனி மனித முன்னேற்றத்திற்கு மொழி இன்றியமையாத ஒன்றாகும். ஆயினும் மக்களின் தொகுப்பாகிய சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மொழி மற்றும் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும். இன்றைய வாழ்வு நாளை வரலாறாகலாம். ஆகையால், தனி மனித வளர்ச்சி, ஒட்டு மொத்த சமுதாய வெற்றியினை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் மொழியின் முக்கியத்துவம் குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அதனடிப்படையில் சமூக வெற்றிக்கு பெரிதும் துணையாக இருப்பது மொழியும், பண்பாடும் என்பதே தீர்ப்பாக வழங்கப்பட்டது.