இந்துஸ்தான் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிலைத்தன்மை அறிவியல் மற்றும் உலகளாவிய மாநாடு என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக மலேசியா ஏ.ஐ.எம்.எஸ்.டி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், மூத்த இணைப் பேராசிரியர் கதிரேசன்.வி.சதாசிவம் மற்றும் மலேசியா சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் மருந்து தொழில்நுட்ப துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியர் லியூ கய் பின் ஆகியோர் கலந்துகொண்டு, கருத்தரங்கை துவக்கி வைத்தனர்.

பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுகரைகளை இந்த கருத்தரங்கில் வெளியிட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.

மேலும் இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலர் பிரியா, கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி, உயிரி தொழில்நுட்பவியல் துறை தலைவி ராஜலட்சுமி, நுண்ணுயிரியல் துறையின் தலைவர் லாலிகிரௌதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.