ஹச்பி குரோம்புக் மடிக்கணினி இந்தியாவில் அறிமுகம்

ஹச்பி தனது சமீபத்திய குரோம்புக் நோட்புக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஹச்பி குரோம்புக் 15.6, இன்டெல்லின் செலரான் N4500 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

இன்றைய ஹைபிரிட் சூழலில், இளம் நுகர்வோர், உற்பத்தித் திறன், படைப்பாற்றல், பொழுதுபோக்குடன் இருப்பதற்கு மற்றும் கற்றலுக்கும் தடையின்றி மாற உதவும் சாதனங்களைத் தேடுகின்றனர்.

ஆற்றல் மற்றும் புதிய தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், புதிய ஹச்பி குரோம்புக் 15.6 ஆனது, பெரிய திரை மற்றும் Wifi6 உடனான வலுவான இணைப்பு மற்றும் 11.5 மணிநேரம் (HD), ஹைப்ரிட் தலைமுறையில் தேவைப்படும் திட்டங்கள் மற்றும் எளிதான பொழுதுபோக்குகளுக்கு ஏற்றதாகத் திகழ்கிறது.

ஹச்பி இந்தியாவின் தனிநபர் கணிணிகள் பிரிவின் மூத்த இயக்குனர் விக்ரம் பேடி கூறுகையில், இன்றைய ஹைபிரிட் கற்றல் அணுகுமுறையில் கணினிகள் அவசியமாகும். எங்களின் புதிய குரோம்புக் 15.6 மடிக்கணினிகள், வீட்டில் அல்லது வகுப்பறையில் படிக்கும் போது இணைப்பு மற்றும் உற்பத்தித்திறனை செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஹச்பி குரோம்புக் 15.6 ஆரம்ப விலை இந்திய ரூபாய் 28,999/- இல் கிடைக்கிறது. குரோம்புக் போர்ட்ஃபோலியோவில் உள்ள பிற தயாரிப்புகள் ஹச்பி குரோம்புக் x360 14a இன்டெல் பவர்டு ரூபாய் 28,999/- விலையில் கிடைக்கிறது.

ஹச்பி குரோம்புக் x360 13.3 இன்டெல் பவர்டு ரூபாய் 44,999/- விலையில் கிடைக்கிறது .ஹச்பி குரோம்புக் 11’’ மீடியாடெக் பவர்டு ரூபாய் 22,999/- விலையில் கிடைக்கிறது. ஹச்பி குரோம்புக் 14’’ டச் எனேபிள்டு இன்டெல் பவர்டு ரூபாய் 26,999/ விலையில் கிடைக்கிறது.