ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரிக்கு சாம்பியன் பட்டம்

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்காக தேசிய அளவிலான எலக்ட்ரிக் பைக் சேலஞ் போட்டி நடத்தப்பட்டது.

இதில் இந்தியா முழுவதிலும் இருந்து மொத்தம் 18 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லலூரியை சேர்ந்த 15 மாணவர்கள் கொண்ட குழு பங்கேற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், 5 பிரிவு வாரியாக விருதுகளையும் பெற்று ரூ.80,000/- ரொக்கப்பரிசுகளை வென்றது.

சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர்கள் குழுவினை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லக்ஷ்மிநாராயணசுவாமி, கல்லூரியின் முதல்வர் பால்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.