இந்துஸ்தான் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மலேசியா ஏ.ஐ.எம்.எஸ்.டி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மற்றும் மூத்த இணை பேராசிரியர் கதிரேசன்.வி.சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் பயின்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 1200 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் 26 மாணவர்கள் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றனர். அவர்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரஸ்சுவதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் முதன்மைக் கல்வி அதிகாரி கருணாகரன், முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.