ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் கணினி மற்றும் உயிர் அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் சித்ரா தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் திருச்சி என்ஐடியின் கெமிக்கல் இன்ஜினியரிங் துறைப்பேராசிரியர் அர்த்த நாரீஸ்வரன் கலந்துகொண்டு கருத்தரங்கைத் துவக்கிவைத்தார்.

அவர் பேசும்போது உயிர் அறிவியல் துறைகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா அனாலிடிக் எனப்படும் தரவுப் பகுப்பாய்வின் முக்கியத்துவம் பற்றிக் கூறியதோடு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்துறை ஆய்வுகளுக்குக் கிடைக்கும் நிதியுதவிகள் பற்றியும் எடுத்துக்கூறினார்.

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தின் அறிவியல் அலுவலரும் மெடிக்கல் டெக்ஸ்டைல் துறை வல்லுநருமான அமலோற்பவ மேரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, மருத்துவத்தில் நானோ இழைகளின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால வளர்ச்சிகள் பற்றிக் கூறினார்.

தொடர்ந்து ஸ்வீடனில் உள்ள ப்ரெட்ஜ் நிறுவனத்தின் ரயில்வே துறை டேட்டா அனலிஸ்ட்டாகப் பணிபுரிந்துவரும் சுமந்த் தனது பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.