இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ‘கல்லூரி விழா’

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்லூரி விழா ‘ஹின்ஸ்பைர்’ (HINSPIRE 2023) நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக நடிகை ரைசா வில்சன், நடிகர் தர்ஷன் கலந்துகொண்டனர்.

கல்லூரி முதல்வர் ஜெயா ஆண்டு அறிக்கையை படித்தார். தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், டீன் மகுடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

துறை வாரியாக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன், இணை செயலாளர் பிரியா சதீஷ் பிரபு மற்றும் யமுனா சக்திவேல் பரிசுகளை வழங்கினர்.

மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் சுமார் 5000 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.