ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் கருப்பை வாய் புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை

கோவையில் முதல் முறையாக ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் கருப்பை வாய் புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை முறை வழங்கப்படுகிறது.

கர்பப்பை வாய்ப் புற்றுநோய், மக்களை அதிகமாக தாக்கும் புற்றுநோய்களில், இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு 8 நிமிடங்களுக்கும் 1 இந்தியப் பெண் இந்த புற்றுநோயினால் இறக்கிறார். பயனுள்ள தடுப்பூசி மற்றும் எளிய ஸ்கிரீனிங் சோதனைகள் இருக்கும் போதிலும், பல பெண்கள் நோய் முற்றிய நிலைகளில் கண்டறியப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கதிரியக்க சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள், கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும் முறையை மாற்றியமைத்து, குறைந்த பக்க விளைவுகளுடன் மேம்பட்ட விளைவுகளுக்கு வழிவகுத்துள்ளது.

இத்தகைய ஒரு எதிர்கால முன்னேற்றம் 4-D அடாப்டிவ் பிராக்கிதெரபி ஆகும். இது ஒரு துல்லியமான கதிரியக்க சிகிச்சை முறை. இந்த சிகிச்சை குணப்படுத்தும் விகிதங்களை அதிகரித்துள்ளது. ஜி.கே.என்.எம் மருத்துவமனையில், கோவை மாநகரிலேயே, முதல் முறையாக, இந்த நவீன 4-D அடாப்டிவ் பிராக்கிதெரபி சிகிச்சை முறை அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களால் மேற்கொள்ளப்படுகிறது.