நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவு

நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. ஆக்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கம் 152 கிமீ (94 மைல்) ஆழத்தில் இருந்ததாக யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு கூறியுள்ளது.