இந்துஸ்தான் கலை கல்லூரியில் கருத்தரங்கம்

கோவை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை துறை சார்பாக Exemplar-2023 என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கோயமுத்தூர், சாமா டெக்னாலஜியின், பொறியியல் மேலாளர், நந்தினி, கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி இக்கருத்தரங்கை துவக்கி வைத்து, வணிக உலகின் நெறிமுறைகள் குறித்து உயைாற்றினார்.

இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலர் பிரியா, கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி, துறையின் இயக்குனர், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.