இந்துஸ்தான் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கணினி தகவல் தொழில்நுட்பத்துறை
சார்பாக ‘ஸ்பைடர்-2023’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா மற்றும் முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தனர்.

இதில் இந்தியாவில் அளவில் இருந்து 80 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 850 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, பல்வேறு வகையான கணினி அறிவியல் சார்ந்த போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும் மாணவர்களின் சிந்திக்கும் திறன், பிழைத்திருத்தம், சந்தைப்படுத்துதல், வலை வடிவமைப்பு, சுவரொட்டி தயாரித்தல், காகித விளக்கக் காட்சி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் பங்கேற்று ஒட்டுமொத்த வெற்றி புள்ளிகளைப் பெற்ற கல்லூரிக்கு பரிசுத்தாகையும் சான்றிதழ்களும், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக பெங்களுரில் உள்ள தனிார் ஐ.டி.துறையின் சீனியர் அனலையஸ்ட் செயலாளர் ஸ்ரீகாந்த் பாலாஜி கலந்து கொண்டு ஸ்பைடர் 2023 மேகஷினை வெளியிட்டு பேசுகையில்: மாணவர்கள் தாங்கள் படிக்கின்ற காலத்தில் தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு அதனை வெளிப்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறினார்.