ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 32வது விளையாட்டு விழா பி.ஆர்.எஸ் மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சித்ரா தலைமையில் நடைபெற்ற விழாவில் 2020ம் ஆண்டுக்கான தியான்சந்த் விருது பெற்ற, மத்திய ஆயுதப் படையின் கமாண்டண்ட்டாகப் பணிபுரியும் ஜின்சி பிலிப் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

கலை நிகழ்ச்சிகளுக்கு நடுவராக நாட்டியக்கலைமணி அகல்யா யோகராஜ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கொடியேற்றத்தைத் தொடர்ந்து கல்லூரி மாணவியரின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர், பேராசிரியர்கள் மற்றும் மாணவியருக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர் ஜின்சி பிலிப், மாணவிகள் படிப்போடு உடற்பயிற்சி, விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். அதனால் உடல்நலத்தோடு மனநலத்தையும் பாதுகாக்க முடியும் என்று கூறினார்.

பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவிகள், பேராசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த பங்கேற்பாளருக்கான பரிசு கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த கார்த்திகாவுக்கு வழங்கப்பட்டது.

புதுதில்லியில் நடைபெற்ற குடியரசுதின அணிவகுப்பில் கலந்து கொண்ட மாணவி அபர்ணாவுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. பெஸ்ட் அவுட்கோயிங் விருதை மூன்றாமாண்டு பிசிஏ மாணவி பிரவீணாவு, சிறந்த அதலெட் விருதை முதலாண்டு பிகாம் மாணவி லாவண்யாவும், சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை இரண்டாமாண்டு பிபிஏசிஏ மாணவி மிருதுளாவும், ரைசிங் ஸ்டார் விருதை முதலாண்டு பயோகெமிஸ்ட்ரி மாணவி சுபாவும் பெற்றனர்.

சிறந்த அணிவகுப்புக்கான முதல் மூன்று இடங்களை முறையே வணிகவியல், ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியல்துறை மாணவிகள் பெற்றனர். விளையாட்டு விழாவில் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாகப் பங்கேற்ற துறைக்கான பரிசை வணிகவியல் துறை பெற்றது.