எஸ்.என்.எஸ் மருந்தியல் கல்லூரியில் புற்றுநோய் ஆராய்ச்சி குறித்த கருத்தரங்கம்

எஸ்.என்.எஸ் மருந்தியல் மற்றும் சுகாதார அறிவியல் கல்லூரி மற்றும் மருந்தியல் வல்லுநர்கள் சங்கம் இணைந்து இந்தோ-இத்தாலிய என்ற சர்வதேச கருத்தரங்கை நடத்தினர். ‘உலகளவில் மருந்து மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சியின் தற்போதைய அம்சங்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

எஸ்என்எஸ் நிறுவனங்களின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன், தாளாளர் ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார் ஆகியோர் பார்மசி வல்லுநர்கள் சங்கத்தால் பாராட்டப்பட்டனர்.

இத்தாலியின் ஜெனோவாவில் உள்ள ஓஸ்பெடேல் பாலிக்லினிகோ சான் மார்டினோவில் உள்ள ட்யூமர் எபிஜெனெடிக்ஸ் ஆய்வகத்தின் இயக்குனர் உல்ரிச் பிஃபெஃபர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, ‘புற்றுநோய் தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சை-எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்’ என்ற தலைப்பில் பேசினார்.

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜியின், பேராசிரியர் செல்வமணி புற்றுநோய் சிகிச்சைக்கான பெப்டைட்-இணைந்த நனோ-மேக்னெட்டிக் ஆய்வுகளை பற்றி விளக்கினார்.

கேரளா செயின்ட் ஜோசப்ஸ் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பேராசிரியர் பாபி ஜான், மருந்துத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தற்போதைய பயன்பாடுகள் மற்றும் சிகிச்சை தரத்தை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவின் எதிர்கால அணுகுமுறைகளை விவரித்தார்.

க்ரிட்டி லைஃப் சயின்சஸ், கேரளாவின் தயாரிப்பு மேலாளர் அப்துல் நசீர், மருந்துத் தொழில்களில் பின்பற்றப்படும் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மற்றும் சர்வதேச ஒழுங்குமுறை தேவைகள் குறித்து விளக்கினார்.

ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியருக்கு இ-போஸ்டர் போட்டி நடத்தப்பட்டது. சிறந்த இ-போஸ்டர் காட்சிக்காக எஸ்.ஏ.ராஜா மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் சேவியர் அருளப்பா, கே.எம்.சி.ஹெச் கல்லூரியின் காவியா, ஸ்ரீ அபிராமி பார்மசி கல்லூரியின் தனுஷா, எஸ்.என்.எஸ் மருந்தியல் மற்றும் சுகாதார அறிவியல் கல்லூரியின் ரக்க்சனா ஆகியோர் பரிசு பெற்றனர்.

மாநாட்டின் இறுதியில், இந்திய மருந்தக பட்டதாரிகள் சங்க பொருளாளர் இளங்கோ தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார். இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களில் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சிறந்த மாணவருக்கான விருது கவின், சிறந்த மாணவிக்கான விருது ரக்ஷனா, சிறந்த திறமையாளர் விருது சக்தி புவிஷா, சிறந்த செயல்திறனுக்கான விருது பாலச்சந்திரன், சிறந்த சாதனையாளர் விருது ஜானகி ஆகியோர்க்கு வழங்கப்பட்டது.