ஐ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் சார்பில் திறந்த நிலை அடிப்படையிலான முதலீட்டுத் திட்டம் அறிமுகம்

ஐ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட், ஐ.டி.ஐ. ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட் என்ற திறந்த நிலை அடிப்படையிலான முதலீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஐ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் (ITI Mutual Fund) நிதித் திட்டம் தனது செயல்பாடுகளை 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதிலிருந்து இந்நிறுவனம் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புக்கேற்ற 16 பரஸ்பர நிதித் திட்டங்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

ஐ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய முதலீட்டுத் திட்டத்தில் (NFO) ஜனவரி 27 முதல் பிப்ரவரி 10, 2023 வரை முதலீடு செய்வதற்கான வாய்ப்புள்ளது.

இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ. 5,000 ஆகவும், பின்னர் ரூ. 1–ன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். இந்த நிதித் திட்டமானது திமன்ட் ஷா மற்றும் ரோஹன் கோர்டே ஆகியோரால் கூட்டாக நிர்வகிக்கப்பட உள்ளது. ஐ.டி.ஐ. ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட் திட்டமானது நிஃப்டி 500 குறியீட்டின் வருவாய்க்கு இணையாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிதியானது பங்கு மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்யப்படும். பங்குச் சந்தை சூழலுக்கேற்ப பெரிய, நடுத்தர மற்றும் சிறு நிறுவன பங்குகளில் முதலீடு செய்யப்படும்.

புதிய முதலீட்டுத் திட்டம் குறித்து ஐ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்டின் முதன்மை முதலீட்டு அதிகாரி ராஜேஷ் பாட்டியாகூறுகையில், ஐ.டி.ஐ. ஃபிளெக்ஸி கேப் முதலீட்டுத் திட்டமானது, சந்தை சூழலுக்கேற்ப பல்வேறு துறை பங்குகளில் பரவலாக முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

முதலீட்டு அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பிற தொழில்துறை பங்குகளின் வளர்ச்சி காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டுக்கு ஏற்ற ஆதாயத்தை கண்கூடாகப் பார்க்க முடியும். கடந்த காலங்களில் மிகச் சரியான முதலீடுகளில் சிறந்த ஆதாயம் கிடைத்தன. அந்த வகையில் ஐ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் பல்வேறு முதலீட்டுத் தீர்வுகளை முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் வழங்க உள்ளது என்றார்.