ஜெம் மருத்துவமனையில் உலக புற்றுநோய் தின விழா

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, கோவை ராமநாதபுரம், ஜெம் மருத்துவமனையில் புற்றுநோயுடன் போராடி உயிர் பிழைத்த 75 நோயாளிகளை பாராட்டும் நிகழ்வு சனிக்கிழமையன்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

‘வாழ்க்கையை கொண்டாடுதல்’ என்ற கரும்பொருளை கொண்டு நடைபெற்ற இந்நிகழ்வில் வயிறு குடல் மற்றும் இரைப்பை மற்றும் மகளிருக்கு வரக்கூடிய புற்றுநோய்யால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களது பயணத்தை பற்றி பகிர்ந்து கொண்டனர். இதில் பலர் பாடியும், நடனமாடியும், விளையாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உயிர் பிழைத்த நோயாளிகளை பாராட்டி நினைவு பரிசினை வழங்கினார்.

மேலும், சில நோயாளிகள் ‘கேர் ஃபார் லைஃப்’ என்கிற தி்ட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து கொண்டவர்கள். இது ஜெம் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபோலிஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து செயல்படுத்தும் திட்டமாகும். வறுமை கோட்டிற்கு கீழ்வாழும் ஏழை எளிய மக்களுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்யப்படுகிறது. ஜெம் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை மற்றும் பரிசோதனையை மேற்கொள்ள வசதியாக, இந்ததிட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும் மருத்துவ நல அட்டைகள் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஜெம் மருத்துவமனையின் இணை நிர்வான இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ், நிகழ்வில் ஜெம் மருத்துவமனையனின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், ரோட்டேரியன்கள், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.