வேளாண் பல்கலையில் பட்டயப் படிப்புகளுக்கான இணையதள கலந்தாய்வு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் போன்ற பட்டயப்படிப்புகளுக்கு மொத்தம் 2036 விண்ணப்பங்கள் பெறப்பெற்றன.

இவற்றுள் 2025 விண்ணப்பங்கள் தகுதியானவைகளாக கருதப்பட்டு அவற்றுக்கான தரவரிசைப் பட்டியல் www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான இணையதள கலந்தாய்வு இன்று (ஜனவரி 28) முதல் ஜன.,30 வரை நடைபெறவுள்ளது. இணையதள கலந்தாய்வு தொடர்பான விரிவான தகவல் தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இணையதள கலந்தாய்வின் போது விண்ணப்பதாரர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. சான்றிதழ் சரிபார்ப்பின் போது விண்ணப்பதாரர்களிடமிருந்து கட்டணம் பெற்றுக் கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் tnau.ucanapply.com மூலம் உள் நுழைந்து ஜனவரி 30 மாலை 5 மணி வரை தங்கள் கல்லூரி மற்றும் பாட விருப்பங்களை மாற்றிக் கொள்ளலாம். கடைசியாக உறுதி செய்யப்பட்ட விருப்பம், கல்லூரி மற்றும் பாட இட ஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படும். இதுகுறித்த தெளிவான படிப்படியான செயல்முறை விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அண்ணா அரங்கில் நடைபெறும்.

கலந்தாய்விற்கான வழிமுறைகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட மாணவர் விவரங்களை www.tnau.ucanapply.com என்ற இணையதள வாயிலாகவும் தெரிந்துக் கொள்ளலாம்.

இதன் பொருட்டு ஏதேனும் விவரங்கள் தேவைப்பட்டால் 0422-6611345 என்ற தொலைபேசி வாயிலாகவும் மற்றும் ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.