கோவையில் ஆர்ட்டிஸ் ஸ்கின் & ஹேர் கிளினிக் துவக்கம்

கோவை ஆர். எஸ். புரத்தில் ஆர்ட்டிஸ் ஸ்கின் அண்டு ஹேர் கிளினிக் தனது புதிய மையத்தை துவக்கியுள்ளது. இதன் திறப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

துவக்க விழாவில் ஆர்ட்டிஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதர் பேசியதாவது: வேகமாக வளர்ந்து வரும் கோவை மாநகரத்தில் மக்கள் அனைத்து துறையிலும் உயர்ந்த தரத்தை எதிர்பார்க்கிறார்கள். இங்கு அழகியல் துறையில் சிறந்து விளங்கும் ஆர்ட்டிஸ் நிறுவனத்தின் புதிய மையத்தில் ஒரே கட்டிடத்தில் பற்பல நவீன அழகு சிகிச்சைகளை வழங்குவதில் பெருமை கொள்கிறோம் என்றார்.

இம்மையத்தை சாந்தி ஆஸ்ரமத்தின் தலைவியான டாக்டர் கீசிவினோ அறம் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், இன்று பற்பல மக்களும் விரும்பி செய்து கொள்ளும் அழகு சிகிச்சைகளை மருத்துவர்களின் ஆலோசனையுடன் ஆர்ட்டிஸ் மையம் வழங்குவது பாராட்டத்தக்கது என்றார்.

துவக்க விழா சலுகையாக, பிப்ரவரி 10 வரை இலவச ஆலோசனை வழங்கப்படும். மேலும் சிகிச்சைகளுக்கு 15 % தள்ளுபடி வழங்கப்படும்.

ஆர்ட்டிஸ் ஸ்கின் அண்டு ஹேர் கிளினிக் நவீன உபகரணங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தோல் மற்றும் உடலுக்கான மேம்பட்ட அழகு சிகிச்சைகளை வழங்குவதில் தென்னிந்தியாவின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.

மேலை நாடுகளில் உபயோகிக்கப்படும் அமெரிக்க நிறுவனமான எஃப்டிஎ-ஆல் அங்கீகரிக்கப்பட்ட நவீன உபகரணங்களும், அழகு சாதனங்களும் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. இங்கு மிகவும் தேர்ச்சி பெற்ற தோல் துறை நிபுணர்களும், அழகுத் துறை வல்லுநர்களும், தோல் மற்றும் கேசத்தை அழகுபடுத்தும் சிகிச்சைகளை அளிக்கிறார்கள்.

விபரங்களுக்கு 0422 4723366 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்