ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி சார்பில் சமூக விழிப்புணர்வு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும், கோவை மாநகர காவல்துறையும் இணைந்து இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டுமென்ற இலக்கை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில் கல்லூரி மாணவியர் பொதுமக்களிடையே தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். மாணவியரின் சமூகப் பொறுப்புணர்வைக் கல்லூரி முதல்வர் சித்ரா, காவல்துறை அதிகாரிகள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சுபாஷினி ஆகியோர் பாராட்டினர்.