சாலையில் பன்றிகள் சுற்றித் திரிந்தால், அவற்றின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை – மாநகராட்சி எச்சரிக்கை

கோவையில் மாநகராட்சி சாப்ரில் வெளியிடப்பட்டு செய்தி குறிப்பில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் நாட்டுப் பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இவைகளில் பொது சுகாதாரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகின்றன். கோவை மாநகராட்சி மாமன்ற தீர்மானத்தின்படி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பன்றிகள் வளர்ப்பவர்கள் வரும் 15 ஆம் தேதிக்குள் உடனடியாக பொது இடங்களில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் 15 ஆம் தேதிக்கு பிறகு பொது சுகாதாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சுற்றித் திரியும் பன்றிகளை வளர்க்கும் உரிமையாளர்களின் மீது மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜய கார்த்திகேயன் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.