என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘டெக் ஃபெஸ்ட்’

மாணவ சமுதாயத்தின் திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘டெக் ஃபெஸ்ட் 2022’ எனும் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தலைமை விருந்தினர்களாக கே.எம்.சி.ஹெச் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி, என்.ஜி.பி தொழில்நுட்பக் கல்லூரியின் செயலாளர் தவமணி பழனிசாமி, கே.எம்.சி.ஆர் & இ.டி தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ்வரன், கல்லூரியின் முதல்வர் பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவிற்குப் பிறகு கலாச்சார நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. தனி நடனம், மைம், பாடலுக்கேற்ற நடனம், மெல்லிசை மற்றும் குழு நடனம் ஆகியவை நடைபெற்றது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றனர். இதில் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.