‘பகாஷ் கணபதி’ – கரும்பு சக்கையில் இருந்து விநாயகர் சிலை தயாரிப்பு – கல்லூரி மாணவர்கள் புதிய முயற்சி

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகரின் வழிபாட்டிற்காக, கோவையை அடுத்த சரவணம்பட்டி பகுதியில் உள்ள, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மணாவர்கள் தமது ஆராய்ச்சியின் மூலமாக கரும்பு சக்கையில் இருந்து விநாயகரை முதல் முறையாக உருவாக்கி உள்ளனர். செம்பு, உலோக அச்சு வடிவத்தை கொண்டு பகாஷுடன் ஸ்டார்ச் கலந்து இந்த சிலை தயாரிக்கப்படுகிறது. இந்த சிலையானது தண்ணீரில் விடப்படும் பொழுது முழுமையாக கரைந்து தண்ணீரில் உள்ள மீன் மற்றும் பிற உயிரினங்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. இதனால் செயற்கையான மூலப் பொருட்கள் மூலமாக செய்யப்பட்ட விநாயகர் சிலைகளின் மூலமாக ஏற்படும் மாசு தடுக்கப்படுகிறது. இந்த கல்லூரியின் இயற்கை இழை ஆராய்ச்சி மையத்தினர் இந்த விநாயகரை தயாரித்து உள்ளது. இந்த ஆராய்ச்சி முயற்சியில் 30 மாணவர்கள் கடந்த ஒரு ஆண்டாக ஈடுபட்டு பகாஷ் விநாயகர் சிலையை உருவாக்கி உள்ளனர். இந்த சிலையானது குறைந்த விலையில் விரைவில் கிராமம் மற்றும் நகர் மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளனர். 500 க்கும் மேற்பட்ட சிலைகளை மாணவர்கள் தயாரித்து விற்பனைக்காக கொண்டு செல்ல உள்ளனர்.