தொழில்நுட்ப கருத்தரங்கில் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்த இந்துஸ்தான் மாணவர்கள்

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் ரசாயன பொறியியல் துறை மாணவ மாணவியர்கள், உத்தரபிரதேசம் கான்பூர் ஹர்கோர்ட் பட்லர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கில் (CHEMCON-2022) கலந்துகொண்டு ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

13 மாணவர்கள் 4 அணிகளாக முறையே கலந்து கொண்டு நான்கு ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் சார்பாக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இத்துறையின் தலைவர் சீனுவாசன், கருத்தரங்கில் ஒரு பகுதியான (Process Simulation and Optimization) பலநாடுகளில் இருந்து வந்த போட்டியாளர்களால் விளக்கம் அளிக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை தலைமை தாங்கி வழி நடத்தினார்.

இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன், செயலாளர் பிரியா சதிஷ் பிரபு, கல்லூரியின் தலைமை நிர்வாக அலுவலர் கருணாகரன், கல்லூரி முதல்வர் ஜெயா, டீன் மகுடேஸ்வரன் ஆகியோர் தொழில்நுட்ப கருத்தரங்கத்தில் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவ. மாணவியர்களை வாழ்த்தினர்.