கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் விழா!

கே.எம்.சி.ஹெச் மருத்துவக் கல்லூரி 2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது இக்கல்லூரியின் 2022 – 2023 முதலாமாண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் விழா வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனை கலையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கோவை பாரதிய வித்யா பவன் பள்ளியின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்து வாழ்த்தினார். பின்னர், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முதலாமாண்டு மருத்துவ மாணவர்களும், பேராசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர். கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி, துணை தலைவர் தவமணி பழனிசாமி மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர்.