வாக்காளர் இறுதி பட்டியல் ஜனவரி 4 ஆம் தேதி வெளியீடு

தலைமை செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்வது தொடர்பாகஆலோசனை நடந்தது. பூத் ஏஜென்ட் நியமனம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.கூட்டத்திற்கு பின் தேர்தல் அதிகாரி கூறியதாவது: நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வேட்பாளர் பட்டியல் ஜனவரி 4ம் தேதி வெளியாகும். சிறப்பு வாக்காளர் முகாம் செப்டம்பர் 9,23 மற்றும் அக்டோபர் 7 , 14 தேதிகளில் நடக்கும். இந்த ஆண்டு, இதுவரை 5.72 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இது கடந்தஆண்டை காட்டிலும் 4 லட்சம் குறைவு என்றார்.