மழலைகளுக்கு விளையாட்டு போட்டி

நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியின் எல்.கே.ஜி, யூ.கே.ஜி குழந்தைகளுக்கான விளையாட்டு தினத்தில் மழலைகள் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்றனர்.

இதில் சிறப்பு விருந்தினராக பேபி மா பீடியாட்ரிக் சென்டரின் மருத்துவர் அஸ்வின் சங்கமேஷ் கலந்துகொண்டார்.

நேஷனல் மாடல் பள்ளியின் தாளாளர் மோகன் சந்தர், செயலர் உமா மோகன் சந்தர், தலைமையாசிரியர் கீதா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.