தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் வேளாண் வளர்ச்சிக்கான பயிற்சி முகாம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் வளர்ச்சிக்கான உலகளாவிய மேம்பாடு குறித்த பன்னாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

பயிற்சி முகாமினை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து தலைமையுரையாற்றினார். அவர் பேசுகையில்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தினார். பயிற்சியாளர்கள் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்ற தொழில்நுட்ப அறிவை சரியான வழியில் பயன்படுத்தி விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கனடாவின் திட்டமேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் டேவிட் பாக்ஸ் பயிற்சி குறித்து விளக்கம் அளித்தார்.

ஆப்பிரிக்கா உகாண்டாவில் வேளாண்மை பயிற்றுவிப்பாளர்களாக ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வேளாண் வளர்ச்சிக்கான உலகளாவிய மேம்பாடு குறித்த பன்னாட்டு பயிற்சி முகாம் வரும் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.